ரூ.40 லட்சத்திற்கு விற்பனை?..பானிபூரி வியாபாரிக்கு பறந்த நோட்டீஸ்? - தீயாய் பரவும் அந்த எவிடன்ஸ்
தமிழ்நாட்டைச் சேர்ந்த பானி பூரி வியாபாரி ஒருவர், கடந்த நிதியாண்டில் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் பானி பூரி விற்பனை செய்துள்ளதாக ஜி.எஸ்.டி. நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆன்-லைன் பேமெண்ட் ஆப் மூலம் அவர் மேற்கொண்ட பரிவர்த்தனைகளை ஆதாரமாக கொண்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பானி பூரி விற்பனை மூலம் கிடைத்த வருமானம் குறித்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. பானி பூரி வியாபாரிக்கு அனுப்பப்பட்ட ஜிஎஸ்டி நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story