பாம்பன் பாலத்தில் 90 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்த ரயில்
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சீறிப்பாய்ந்து சென்றது. மண்டபம் பகுதியையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்க புதிதாக ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் மூன்று பெட்டிகள் கொண்ட ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்ட நிலையில் அதனை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருப்பதால் விரைவில் புதிய பாலத்தில் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story