"பணம் வாங்கிட்டு செய்கிறாரா" - சென்னையில் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்
சென்னை பல்லாவரம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன், மாட்டின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில், சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, ஒரு மாட்டின் கழுத்தில் கயிறு இறுக்கியதால், அந்த மாடு மயங்கி விழுந்ததாக தெரிகிறது. மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த மாட்டின் உரிமையாளர்கள், மாடுகள் மேய்வதற்கு மேகால் புறம்போக்கு நிலங்களை மீட்டு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Next Story