தமிழகத்தை உலுக்கிய பல்லடம் சம்பவம் - ஆவேசமான ஓபிஎஸ்
பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் திமுக அரசாங்கம் சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டை அழிவுப்பாதையில் அழைத்து செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும், கொலையாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தி, விரைந்து தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
Next Story