கோவில் யானை மரணம் - கதறி அழுத பெண்
பழனி வன்னி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான யானை சரஸ்வதி, உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது. வன்னி விநயாகர் கோவில் வளாகத்தில் இறுதி சடங்குகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஏராளபான பக்தர்கள், இறந்த யானைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதில் ஒருவர், சரசு... தங்க புள்ளை...இப்படி போய்ட்டியே என யானை உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
Next Story