பணமழையில் பழனி - தைப்பூச உண்டியல் காணிக்கை இவ்வளவு கோடியா..?
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயிலில், தைப்பூசத் திருவிழா உண்டியல் காணிக்கை, 3 கோடியே 31 லட்சம் ரூபாயை தாண்டியது. தைப்பூச திருவிழாவுக்கு குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் உண்டியல் நிரம்பியதை அடுத்து, மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் காணிக்கை எண்ணப்பட்டது. ரொக்கமாக 3 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 776 ரூபாயும், 557 கிராம் தங்கம், 21 ஆயிரத்து 235 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்துள்ளன.
Next Story