பழனி முருகன் கோயில் அருகே அதி பயங்கரம்... மக்களை பதறவைத்த சம்பவம்

x

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் அருகே கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி முருகன் கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதிக்கு வந்த கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் தங்கள் காரை விடுதியின் வாசிலில் நிறுத்தியிருந்தனர். அப்போது விடுதி பணியாளர்கள் வாசலில் இருந்த சானிடைசர் பேரலை திறந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக சானிடைசர் பேரல் வெடித்து சிதறி, காரின் மேல் தீப்பற்றி எரியத் துவங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், காரில் பற்றிய தீயை தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்