பல இடங்களில் 3,000 ஸ்லீப்பர் செல்கள்.. ஒரே நேரத்தில் முடித்த இஸ்ரேல்.. உலகை மிரட்டிய அட்டாக் வீடியோ

x

பல இடங்களில் 3,000 ஸ்லீப்பர் செல்கள்.. ஒரே நேரத்தில் முடித்த இஸ்ரேல்.. உலகை மிரட்டிய துப்பாக்கி பட பாணி அட்டாக் வீடியோ

லெபனான் நாட்டில் பேஜர் தொலை தொடர்பு கருவிகள் அடுத்த‌டுத்து வெடித்த‌தால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 8 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர்களை தொலைத்தொடர்பு கருவிகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெய்ரூட்டில் அடுத்தடுத்து பேஜர்கள் வெடித்து சிதறின. இதனால், அருகில் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அச்சத்தில் உறைந்தனர்.

பேஜர் வெடிப்பின் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பு இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டது குறித்து விரிவாக விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, இதற்கு பதிலடி கொடுத்து பழி தீர்ப்போம் என்று ஆடியோ மூலம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த தொடர் பேஜர்கள் வெடிப்பு சம்பவங்கள் குறித்து இஸ்ரேல் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில், இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்