"எங்க குடும்பத்துக்கு அச்சுறுத்தல்.." பொள்ளாச்சி மாணவியின் தந்தை பகீர் புகார்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே செங்குட்டுபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பூப்பெய்திய மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைக்கப்பட்ட விவகாரத்தில், பள்ளி தாளாளர், உதவி தாளாளர், அலுவலக உதவியாளர் ஆகிய 3 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், வழக்குப்பதிவு செய்த 3 பேரால் தங்கள் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக்கூறி மாணவியின் தந்தை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Next Story
