வாடிக்கையாளருக்கு ரூ.1.25 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

வாடிக்கையாளருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க நெல்லையைச் சேர்ந்த தனியார் உடல் எடை குறைப்பு நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடை குறைப்பிற்காக ரெஜி டிம்னா என்பவர் அந்த நிறுவனத்தில் 90 ஆயிரம் செலுத்திய நிலையில் அதற்கான உடற்பயிற்சி செய்தபோது முதுகுவலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரால் உடற்பயிற்சி செய்ய முடியாத சூழலில் விதிகளின்படி பணத்தை திருப்பிக் கேட்டதற்கு எடை குறைப்பு நிறுவனம் தர மறுத்துள்ளது. இதனையடுத்து வழக்கு தொடர்ந்த அவருக்கு, செலுத்திய கட்டணம் 90 ஆயிரம், இழப்பீடு 35 ஆயிரம் என ஒன்றே கால் லட்சம் ரூபாய் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்