ஆன்லைனில் போன் ஆர்டர் செய்த கஸ்டமுருக்கு ரூ.20,000.. ஷாக்கில் இருந்தவருக்கு இன்ப அதிர்ச்சி
ஆன்லைனில் போன் ஆர்டர் செய்த கஸ்டமுருக்கு ரூ.20,000.. ஷாக்கில் இருந்தவருக்கு இன்ப அதிர்ச்சி
மொபைல் போனுக்கு பதிலாக தலைமுடி வாசனை திரவியத்தை அனுப்பியதால் இருபதாயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் ராமாபுரம்புதூரை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் மொபைல் போன் வாங்குவதற்கு ஆன்லைன் இணையதளத்தில் ஆர்டர் செய்த நிலையில், அவருக்கு மொபைல் போனுக்கு பதிலாக தலைமுடி வாசனை திரவியம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அவர் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், போனுக்கு அவர் செலுத்திய 24 ஆயிரத்து 519 ரூபாயுடன் சேர்ந்து இழப்பீடாக இருபதாயிரம் ரூபாயை சேர்த்து 44 ஆயிரத்து 519 ரூபாயாக வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story