"ஒரே வீட்டில் 3 குடும்பம்" - கழிவுநீர் முறையாக செல்ல வழியில்லை.. கண்ணீரில் உதகை பழங்குடி மக்கள்

x

அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடி கிராமம்

உதகை அருகே வீடு, நிலம் இல்லாமல் 400-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். 2008ஆம் ஆண்டு பொக்காபுரம் பகுதி யானை வழித்தடமாக அறிவிக்கப்பட்ட பின்னர், பழங்குடியின மக்கள் வீடுகளை கட்டவும், மின் இணைப்பு பெறவும் வனத்துறையினர் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஒரே வீட்டில் 3 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், உரிய வேலை இல்லாததால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்