மூச்சை கையில் பிடித்த படி... குளிரில் நின்ற மாணவர்கள் - அதிர வைத்த பின்னணி

x

உதகை அருகே காக்கா தோப்பு பகுதியில் செயல்படும்

உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இன்று இமெயில்

மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து

மருத்துவ துறை அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கு

தகவல் தெரிவித்தனர். மருத்துவக் கல்லூரியில் பயின்று

வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பணியாளர்கள்

உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மோப்ப நாய்

உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அரசு மருத்துவக்

கல்லூரி முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு தொடர்பாக

எந்த தடயமும் கிடைக்காத நிலையில், வெடிகுண்டு

மிரட்டல் வழக்கம் போல புரளியாக

இருக்கலாம் என தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்