"நீ ரூ.17 லட்சம் குடுக்கிறியா? இல்லேனா ஒன்னும் பண்ண முடியாது!" "என்னோட 28 வருஷ உழைப்பே வீணா போச்சே"

x

"நீ ரூ.17 லட்சம் குடுக்கிறியா? இல்லேனா ஒன்னும் பண்ண முடியாது!" "என்னோட 28 வருஷ உழைப்பே வீணா போச்சே" - நல்லவர்கள் போல் நிர்வாகமே போட்ட நாடகம் - கணவருடன் போராட்டத்தில் குதித்த ஆசிரியர்

பணிமூப்பு அடிப்படையில் தனக்கு கிடைக்க வேண்டிய வேலையை, லஞ்சம் பெற்றுக் கொண்டு வேறோருவர்க்கு கொடுத்து விட்டதாக கூறி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முழு விவரங்களையும் விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

28 ஆண்டுகளாக பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்த தனக்கு கிடைக்க வேண்டிய பணியை, சேர்ந்து ஒன்றரை வருடமே ஆன வேறொருவருக்கு கொடுத்து விட்டதாக கூறி கணவருடன் சேர்ந்து போர்க்கொடி தூக்கி இருக்கிறார் இந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்..

நீலகிரி மாவட்டம் உதகை அருகே செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து வரும் இந்த சத்தியாவதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தி, பள்ளி நிர்வாகம் மீதும் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...

பணி நியமனத்திற்கு பள்ளி நிர்வாகம் லஞ்சம் பெற்றதாகவும், தனக்கு எதிராக தேர்வுத் தாளை முன்கூட்டியே கொடுத்து மால் ப்ராடிக்ஸ் செய்ததாகவும் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்...

28 வருடமாக பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வரும் தன் மனைவி, இடையில் 3 முறை ராஜினாமா செய்ய முயன்றதாகவும், பின்னர் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக கூறி பள்ளி நிர்வாகம் தங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக மனம் குமுறியிருக்கிறார் சத்யாவதியின் கணவர்..

அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 28 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியரின் குற்றச்சாட்டும், தர்ணா போராட்டமும் உதகையில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்