தமிழக முதலாளிக்கு துரோகம்.. முதுகில் குத்திய வடமாநில குடும்பம் - நாக்பூர் சென்று அலறவிட்ட TN போலீஸ்
உதகை அருகே விவசாயி வீட்டில் 50 சவரன் நகை திருடப்பட்ட சம்பவத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரண்டு மகன்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
உதகை அருகே உள்ள புதுமந்து பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி என்பவர், கடந்த 19-ஆம் தேதி உதகையில் உள்ள கோயிலுக்கு மனைவியுடன் சென்று விட்டு மதியம் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து புதுமந்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மோப்ப நாய் உதவியுடன் அங்கு வந்த ஆய்வு மேற்கொண்ட போலீசார், 4 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர். அப்போது, பழனிசாமியின் தோட்டத்தில் 15 நாட்கள் வேலை செய்து விட்டு, திருட்டு சம்பவத்திற்கு முன் வீட்டைக் காலி செய்து விட்டுச் சென்ற ஈஸ்வரசிங் கார்டு என்பவர், சம்பவம் நடந்த நாளில் வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அவர், தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குத் தப்பிச் செல்வதை அறிந்த போலீசார், ரயிலில் தப்பி சென்ற ஈஸ்வர சிங் கார்டு குடும்பத்தினரை நாக்பூரில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர். துரிதமாக செயல்பட்ட போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.