ஆன்லைன் டிரேடிங் செய்ய பணம் இல்லாததால் கல்லூரி மாணவர் தற்கொலை
ஈரோட்டில் ஆன்லைன் டிரேடிங் செய்ய பணம் இல்லாததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணாம்பாளையத்தை சேர்ந்த முகமது யூனுஸ், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த நிலையில், வீட்டிலிருந்து பணம் வாங்கி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து இழந்துள்ளார். இதனையடுத்து, மீண்டும் முதலீடு செய்ய தனது தாயாரிடம் பணம் கேட்டதற்கு அவர் இல்லை எனக்கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த முகமது யூனுஸ் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.
Next Story