தாயின் கேன்சர் சிகிச்சை - கேபிள் வயரில் முடிந்த மகன் வாழ்க்கை

x

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.

தனது தாய் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாண்டு இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை.

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்( 26). கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு அவ்வப்போது கேட்டரிங் தொடர்பான வேலை பார்த்து வந்துள்ளார்.

இவரது தந்தை கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். தாய் மற்றும் அண்ணனுடன் வசித்து வந்தவர் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவரது அம்மாவுக்கு கேன்சர் நோய் இருந்து வந்ததாகவும் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததாகவும் கூறப்படுகிறது. சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் அவரது தாய் நேற்று கடுமையாக திட்டியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் ஆகாஷை காணாததால் அவரது தாயும் அண்ணனும் தேடி வந்துள்ளனர். இரவும் காணாததால் அதிகாலை 3:30 மணி அளவில் ஆகாஷின், அண்ணன் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் டிவி கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

சடலத்தை மீட்டு கோட்டூர்புரம் போலீசார் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்