திடீரென கேட்ட சத்தம்.. துடி துடித்து பிரிந்த உயிர்.. தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில் வீட்டு மொட்டை மாடியில் ஷெட் அமைப்பதற்காக இரும்பு கம்பியை மேலே ஏற்றும்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பத்திரகாளியம்மன் கோவில் தெரு பகுதியில் பாட்ஷா என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் ஷெட் அமைப்பதற்காக வந்த சண்முகபுரத்தை சேர்ந்த சௌந்தர்ராஜன் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அருகில் நின்ற 13 வயது சிறுவன் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் மயக்கமடைந்த அந்தச் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story