தந்தி டிவி செய்தி எதிரொலி.. சாலையோரம் வசித்த பெண்ணின் வாழ்க்கையை அடியோடு மாறிய தந்தி டிவி

x

தந்தி டி.வி. செய்தி எதிரொலியாக, சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, பெண் குழந்தையுடன் சாலையோரம் சமைத்து சாப்பிட்டு வாழ்ந்து வந்த பெண்ணுக்கு வீடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி ஊராட்சியை சேர்ந்த 40 வயதாகும் பெருமாயி, தனது 10 வயது பெண் குழந்தையுடன், வீடு இல்லாமல் சாலையோரத்தில் வாழ்ந்து வந்தார். கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், பெருமாயியின் தந்தை பெயரில் இருந்த நிலத்தை இவருக்கு தெரியாமலேயே, இவரது சகோதரர்கள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக வீடின்றி, சாலையோரத்தில் வசித்து, அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு, இருவரும் படுத்துறங்கி வந்தனர். இதுகுறித்த செய்தி தந்தி டி.வி.யில் ஒளிபரப்பான நிலையில், ஓமலூர் காவல் ஆய்வாளர் லோகநாதன், செம்மாண்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமாலை தொடர்பு கொண்டு விசாரித்தார். தொடர்ந்து காடையாம்பட்டி வட்டாட்சியர் விமல்பிரகாஷிடம் பேசி, அரசு நிலத்தை தேர்வு செய்து ஆதரவற்ற பெண்ணுக்கு வீடு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் திருமால் முதல்கட்டமாக தனது சொந்த நிதி 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அங்குள்ள அரசு நிலத்தில் கூரை அமைத்து, வீடு அமைத்து கொடுக்கப்பட்டு, உணவுப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்