பெற்ற பிள்ளைகள் கவனிக்கத் தவறியதால் முதியவர் தவறான முடிவு

x

வயதான காலத்தில் பெற்றோரைத் தனியே தவிக்க விடுவதே பாவம்...

அதிலும் உடல்நலன் குன்றிய பெற்றோரை கவனிக்காமல் விடுவதெல்லாம் மகா பாவம்...


கன்னியாகுமரி இரணியல் அருகே குருந்தன்கோடு கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் தான் இந்த 83 வயது முதியவர் சந்திரபோஸ்... இவரது மனைவிதான் 75 வயது லெட்சுமி...

இவர்களுக்கு திருமணமாகி 3 மகள்கள், 3 மகன்கள் உள்ள நிலையில்... அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்...

முதியவர் சந்திரபோசுக்கு ஏற்கனவே கண்பார்வை குறைபாடு...பிள்ளைகளும் கவனிக்காததால் தானே தன் கணவரைக் குழந்தை போல் கவனித்து வந்துள்ளார் லெட்சுமி...

இந்த சூழலில் 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாகி விட்டார் லெட்சுமி...

மகன்கள் அவ்வப்போது கொண்டு வந்தால் மட்டுமே உணவு...

பிள்ளைகள் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்வதில்லை...

தினம் தினம் தன் மனைவி அனுபவிக்கும் நரக வேதனையைக் கண்டு மனம் பொறுக்காமல்...சந்திரபோஸ் லெட்சுமியை கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு...

மனைவி இல்லா உலகில் தானும் வாழ விருப்பமின்றி... கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்...

அப்போது வீட்டிற்கு சென்ற மகன் சுயம்பு இதைக் கண்டு அதிர்ந்து போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளார்...

போலீசார் உயிருக்கு போராடிய சந்திரபோசை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்...

6 பிள்ளைகள் இருந்தும் என்ன பயன்?...

வயதான காலத்தில் பெற்றோரைத் தவிக்க விடும் பிள்ளைகள் தங்களுக்கும் வயதாகும் போது இப்படி ஒரு சூழல் வரும் என்பதை மறந்து விடக்கூடாது...


Next Story

மேலும் செய்திகள்