நீ நான் போட்டி போடும் Ola Uber..களத்திற்கு வந்த Rapido பைக்.. ஆட்டோ கார் ஓட்டுநர்களுக்கு அடிமேல் அடி
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆட்டோவில் பயணிப்பது என்பது பிடித்திருந்தாலும், ஆட்டோ ஓட்டுநர்கள் கூறும் கட்டணங்கள் வாயை பிளக்க வைக்கும்... அந்த அளவிற்கு வரைமுறை இல்லாத கட்டணமாக இருந்த கால கட்டத்தில், ஓலா, உபேர் என்ற நிறுவனங்கள் பயணத்தை இந்தியாவில் ஆரம்பித்தன.ஆட்டோ, கால் டாக்சியை தேடிச் சென்ற காலம் போய், அவற்றை தங்களின் இருப்பிடத்திற்கே வரவழைத்து, பயணிக்கும் தொழில்நுட்பத்தை இந்த இரு நிறுவனங்களும் ஏற்படுத்தின. அதன் மூலம் ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள், அந்த நிறுவனங்களில் தங்களது வாகனங்களை இணைத்து ஓட்டி வருகின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனமும் களத்தில் இறங்கியது.ஆனால், பைக் டாக்ஸி களத்தில் இறங்கியது முதல் கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருமானம் குறைந்ததாக சொல்லப்படுகிறது.இந்த சூழலில் போதிய வருமானம் கிடைக்காததால், ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயித்தல், பைக் டாக்ஸிகளை தடை செய்தல் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கால்டாக்சி ஓட்டுநர்களின் போராட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, பைக் டாக்சி ஓட்டுநர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் மற்றொரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்தப் புகாரில், ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள் மீதான தங்களது ஆதங்கத்தை கொட்டியுள்ளனர் பைக் டாக்சி ஓட்டுநர்கள்...