சென்னை ஏரியில் மர்மம்! -துடிக்க துடிக்க இறந்த வெளிநாட்டுப் பறவைகள்- கொத்து கொத்தாக அழிய காரணம் என்ன?
இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாக விளங்குகிறது பழவேற்காடு ஏரி... ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இங்கு வரும் ஒரு பறவை தான் நார்த்தன் பின்ட்டெயில்...
பார்ப்பதற்கு வாத்து போல காணப்படும் இவற்றின் வால் நீளமாக இருப்பதால், ஊசிவால் வாத்துக்கள் என இவை அழைக்கப்படுகின்றன. இனப்பெருக்கத்துக்காக, சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து பழவேற்காடு ஏரிக்கு வருகின்றன. தொடர்ந்து ஆயிரத்து 800 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் பெற்றிருப்பதால், இவை செல்லமாக பறக்கும் விமானங்கள் என அழைக்கப்படுகின்றன. ஊசிவால் வாத்துக்கள் பார்ப்பதற்கு அழகாகவும், தலை மற்றும் கழுத்து பகுதிகள் சாக்லேட் வண்ணத்திலும், உடம்பு லேசான சாம்பல் நிறத்திலும் காணப்படுகின்றன. இந்த பறைவகள் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பழவேற்காடு ஏரிக்கு வருகின்றன.
கடந்த 2 நாட்களாக, பழவேற்காடு ஏரியில் தஞ்சமடைந்துள்ள நார்த்தன் பின்ட்டெயில் பறவைகள், மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.