"ஒரு வருடத்திற்கு மட்டும் 5 லட்சம்.." -மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம்
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் சாலை விபத்துக்கள் ஏற்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். டெல்லியில் 12 ஆவது போக்குவரத்து உட்கட்டமைப்பு தொழில்நுட்ப கண்காட்சியில் பேசியவர், விபத்துகளில் உயிரிழப்பவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் 18 முதல் 36 வயதுடையவர்கள் என்றார். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டவர், சாலை பொறியியல் முறையை மேம்படுத்த வேண்டும் என்றார்.
Next Story