வந்து விட்டது வீட்டு வேலைகள் செய்யும் ரோபோட்.."என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?.."Nio humanoid robot

x

வீட்டு வேலைகளை கவனிக்க மனித உருவ ரோபோ அசத்தலாக உருவாக்கப்பட்டுள்ளது... நார்வே மற்றும் சிலிகான் பள்ளத்தாக்கில் இயங்கி வரும் 1X நிறுவனம் நியோ என்ற புத்திசாலித்தனமான ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கியுள்ளது... துணி துவைப்பது, காய வைப்பது. வீட்டை சுத்தம் செய்வது என வீட்டு வேலைகளை செய்து மனிதர்களின் நேரத்தை மிச்சப்படுத்த இந்த நியோ உதவும் என 1X தலைமை நிர்வாக அதிகாரி பெர்ன்ட் பொரின்ச் தெரிவித்துள்ளார்... அதுமட்டுமல்லாமல் நியோவுடன் சக மனிதர்களைப் போல் உரையாடவும் முடியுமாம்... உங்களுக்குத் தெரியாதவற்றைக் கற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கிறதாம்... உலகத்தில் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் அங்கிருந்தபடியே நியோவை நீங்க இயக்க முடியும்... ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரிமோட் கன்ட்ரோல் நியோ ஹியுமனாய்ட் ரோபோ அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்