``வாழ்வாதாரமும் போச்சு; தேவையில்லாத கெட்டபெயர்..'' திரண்ட டாக்சி டிரைவர்கள் - பரபரத்த கலெக்டர் ஆபீஸ்

x

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல ரெட் டாக்சி, கோ டாக்சி, ஓலா போன்ற சேவைகள் வழங்கப்படுவதை எதிர்த்து டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் டாக்சி சேவைகள் காரணமாக சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடகை கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் பலனளிக்காததால் அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்