3 கி.மீ. நடந்து சென்று மலைகிராம மக்களை சந்தித்ததும் கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு
நீலகிரியில் உள்ள தோடர் பழங்குடியினர் கிராமத்தில் சுமார் 3 கி.மீ தூரம் நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.
நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பிக்கபத்திமந்து கிராமத்தில் 50 தோடர் பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு சாலை வசதி இல்லாத நிலையில், ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு சுமார் 3 கி.மீ. நடந்து சென்று பழங்குடியின மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஒரு வாரத்தில் நிறைவேற்றவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
Next Story