மான் கூட்டங்களை வேட்டையாட மின்னல் வேகத்தில் துரத்திய சிறுத்தை - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, சிறுத்தை ஒன்று மின்னல் வேகத்தில் மான் கூட்டத்தை துரத்திய காட்சிகள் வைரலாகி வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் சென்று சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க வனத்துறை சார்பில் வாகன சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகள் சென்றபோது, மான் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மின்னல் வேகத்தில் வந்த சிறுத்தை ஒன்று, மான் கூட்டங்களை வேட்டையாடுவதற்காக ஆக்ரோஷத்துடன் துரத்தியது. இதனால் மான்கள் அங்கும் இங்குமாய் ஓடி உயிர் தப்பியது. இந்தக் காட்சிகளை சுற்றுலா பயணி ஒருவர் பதிவு செய்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்