வீட்டை துவம்சம் செய்த காட்டு யானை..! உயிருக்கு பயந்து கட்டிலுக்கடியில் பதுக்கிய தம்பதி.. நீலகிரியில் பகீர் சம்பவம்
கூடலூரை அடுத்த புளியம்பாறை அருகில் உள்ள புளியம் வயல் பகுதியில் வசிக்கும் சுரேஷ்-சுமித்ரா விவசாய தம்பதியின் தோட்ட வீட்டை அதிகாலையில் காட்டு யானை தாக்கி துவம்சம் செய்தது.. வீட்டின் ஒரு பக்கம் முழுவதையும் உடைத்து சமையல் பொருட்கள், உடைமைகள், சோலார் பேனல், விவசாய உபரகணங்களை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது... சுரேஷும் சுமித்ராவும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கட்டிலுக்கடியில் பதுங்கி உயிர் பிழைத்தனர்...
அக்கம்பக்கத்தினர் சத்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்... இதைத் தொடர்ந்து வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் வீட்டை ஆய்வு செய்தனர்...
Next Story