நீலகிரியில் திடீர் மண்சரிவு.. அரசுப் பள்ளிக்குள் புகுந்த பாறைகள் - அதிர்ச்சி

x

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட மண்சரிவால் அரசுப்பள்ளிக்குள் மண் மற்றும் சிறு பாறைகள் புகுந்தது. குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பர்லியார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகேயும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அரசுப்பள்ளிக்குள் மண் மற்றும் சிறிய அளவிலான பாறைகள் புகுந்து, பள்ளியின் பெரும்பான்மையான பகுதிகளை சேதப்படுத்தியது. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால்அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்