ரூ.70 கோடியே 23 லட்சம் ஒதுக்கீடு மாற்றம் - நீலகிரியில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்

x

நீலகிரியில் மத்திய அரசு அறிவித்த பூங்காவை இடம் மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சுற்றுலா தலங்களை உருவாக்கும் நோக்குடன் கடந்த நவம்பர் மாதம் தேவாலா, பொன்னூர் பகுதியில் மலர்கள் பூங்கா அமைக்க பிரதமர் சுமார் 70 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனை மாற்றி 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழக கேரள எல்லையில் பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடைகளை அடைத்து , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் கூடலூர் எம்.எல்.ஏ.ஜெயசீலன் மற்றும் தேமுதிகவை சேர்ந்த விஜய பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்