10ம் வகுப்பு மாணவி பலாத்கார வழக்கு - முக்கிய குற்றவாளியை தட்டி தூக்கிய போலீசார்

x

நீலகிரி மாவட்டம் உதகை அருகே, 10ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே மாணவியின் முன்னாள் காதலன் ஹரிஷ் மற்றும் பிரவீன், பிரேம்குமார், அஜித்குமார், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாபு மற்றும் தமிழ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த காஜா என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில், செல்போன் சிக்னல் மூலம் ஆந்திராவில் இருப்பதை உறுதி செய்து ஆந்திரா சென்று அவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்