உறைய வைக்கும் பனி.. `உப்பு ஹட்டு ஹப்பா’ சிறப்பு வழிபாடு செய்த படுகர் இன மக்கள்

x

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் உப்பு ஹட்டு ஹப்பா என்ற சிறப்பு வழிபாட்டை படுகர் இன மக்கள் செய்தனர். பனிக்காலத்தின் போது தொலைதூரம் மேய்ச்சலுக்கு செல்லும் தங்களது மாடுகள் பத்திரமாக வீடு திரும்புவதற்காக இந்த வழிபாட்டை அவர்கள் மேற்கொள்கின்றனர்.

மாடுகளை உப்பு கலந்த நீரை குடிக்க வைப்பதோடு, வழிபாடு செய்த உப்பினை வீட்டிற்கு எடுத்துச் சென்று மோர் குடிப்பதையும் மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

உதகை அருகே உள்ள கல்லக்கொரை படுகர் கிராமத்தில் இந்த வழிபாடு நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்