இதயமே நொறுங்கும் - கூடலூரில் எடுக்கப்பட்ட கலங்கடிக்கும் போட்டோ

x

உயிரிழந்த, தேயிலை தோட்டத் தொழிலாளி ஒருவரின் உடலை டிராக்டரில் அனுப்பி வைத்ததாக தனியார் எஸ்டேட் மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலுரை அடுத்த பந்தலூர் அருகே அத்திகுன்னா, அத்திமாநகர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி சுந்தரி எஸ்டேட் மருத்துவமனையில் சமீபத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தொடர்ந்து, அவரது உடலை ஆம்புலன்ஸில் வீட்டிற்கு அனுப்பாமல், கடும் குளிரில் எஸ்டேட்டின் ஒரு டிராக்டரில் வைத்து உடலை அனுப்பியது சர்ச்சை ஆனது. இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்த பொதுமக்கள், தொழிலாளர் நலத்துறை மற்றும் முதல்வருக்கு அதை அனுப்பினர். இம்மாதிரியான நேரத்தில், தனியார் எஸ்டேட் நிர்வாகத்தால் தங்களுக்கு நடக்கும் இதுபோன்ற அவலத்தையும் கூட, வெளியே கூறவிடாமல் தொழிலாளர்கள் தடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்