மீனுக்கு உணவு கொடுத்ததால் எமனுக்கு இரையான குழந்தை - பெற்றோர்களே உஷார்
நீலகிரி மாவட்டம் குன்னூரில், மீனுக்கு உணவு கொடுத்து விளையாடிய இரண்டரை வயது குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் கவனிக்காத நேரம், சிமென்ட் மீன் தொட்டியில் மீன்களுக்கு உணவு கொடுத்த போது, குழந்தை தவறி விழுந்துள்ளது. உயிரிழந்த குழந்தை மிருதுளா ஷினி , கார்த்திக் - அஞ்சலி தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story