உடைந்த கார் காண்ணாடி.. உயிரை கையில் பிடித்து டிரைவர் ஓட்டம் - நீலகிரியை பதற வைத்த ஒற்றை காட்டு யானை

x

கோத்தகிரி மலை பாதையில் சென்ற காரின் பக்கவாட்டு கண்ணாடியை காட்டு யானை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப் பாளையம் மலை பாதையில் கடந்த இரண்டு தினங்களாக இரவில் ஒற்றைக் காட்டு யானை உலா வருகிறது. நேற்றிரவு குஞ்சப்பணை பகுதியில் சாலையின் நடுவே முகாமிட்டிருந்தது. அப்போது அணிவகுத்து நின்ற வாகனங்கள் அருகே சென்ற அந்த யானை, ஒரு காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்தது. அதிலிருந்த ஓட்டுநர் வாகனத்திலிருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார். அந்த சாலையில் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்