அட்டூழியம் செய்த புல்லட் யானை..முடிவு கட்ட வந்த கருப்பன் | Elephant

x

அட்டூழியம் செய்த புல்லட் யானை..முடிவு கட்ட வந்த கருப்பன் | Elephant

கடந்த 2016ஆம் ஆண்டு சேரம்பாடி பகுதியில் ஒரு யானை கூட்டம் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது. அந்த கூட்டத்தில் புல்லட் யானை உள்ளிட்ட பல யானைகள் இருந்தன. அவற்றில் ஒரு யானையை பிடித்த வனத்துறை, சீனிவாசன் என பெயரிட்டு கும்கி யானையாக வளர்த்து வந்தது. இந்நிலையில் புல்லட் யானையை பிடிக்க அதன் பழைய நண்பனான சீனிவாசனை வனத்துறை களம் இறக்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே போல் புல்லட் யானையை விரட்ட சீனிவாசன் யானை களம் இறக்கப்பட்டது. அப்போது சங்கிலியை அறுத்துவிட்டு சென்ற சீனிவாசன் யானை, புல்லட் யானையின் அருகே சென்று நின்று கொண்டது. இரண்டு யானைகளையும் பிரிக்க வனத்துறையினர் சுமார் அரை மணிநேரம் போராடினர்.


Next Story

மேலும் செய்திகள்