தாயை இழந்த குட்டி யானை - மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம் | Nilgirs | Thanthi TV

x

கோவை மாவட்டம் தடாகம் அருகே பன்னிமடை வனப்பகுதியில், 7 நாட்களுக்கு முன் பெண் யானை உயிரிழந்த நிலையில், அருகில் ஒரு மாதமே ஆன குட்டி யானை தவித்து வந்தது. அந்த குட்டி யானையை வேறு யானை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைக்குட்டி சேர்க்கப்பட்டது. முதுமலை கொண்டு வரப்பட்ட அந்த யானைக்கு ஊட்டச்சத்து உணவுகளை கால்நடை மருத்துவர்கள் வழங்கினார்கள். குட்டியை பராமரிப்பதற்கு சிவா என்ற பராமரிப்பாளரை வனத்துறையினர் நியமித்துள்ளனர். தற்போது, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் குட்டி யானைகளின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்