ஆட்டோ மீது மின்னல் வேகத்தில் மோதிய ஆம்புலன்ஸ் - நடுரோட்டில் தூக்கி வீசப்பட்ட நபர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆட்டோ மீது ஆம்புலன்ஸ் மோதும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. குன்னூர் அரசு மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்றி கொண்டு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே ஆட்டோ ஒன்று குறுக்கே திரும்பியதால், வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் கலாம் தூக்கி வீசப்பட்டு சாலையில் நடுவே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
Next Story