கண்ட காட்சி... நீலகிரியில் அதிர்ச்சி... வெளியான அதிரடி உத்தரவு

x

நீலகிரி மாவட்டம் முக்குருத்தி தேசிய பூங்காவில் மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொருத்தப்பட்ட பெண் வரையாடு உயிரிழந்த நிலையில், வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரையாடு இனத்தை பாதுகாக்கும் வகையில், நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை 25 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. வரையாடுகளுக்கு புதிதாக ரேடியோ காலர் பொருத்தி அவற்றின் வாழ்வியல் சூழல்கள் குறித்த விவரங்களை சேகரிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, முக்குருத்தி தேசிய பூங்கா வனப்பகுதிகளில் 12 வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை மூன்று ஆடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது. நான்காவதாக, முக்குருத்தி தேசிய பூங்கா வனப்பகுதியில் ஆண் வரையாட்டிற்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில், பெண் வரையாட்டிற்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. இரண்டு மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அந்தப் பெண் வரையாடு பரிதாபமாக இறந்தது. பெண் வரையாட்டின் வயிற்றில் குட்டிகள் இருந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் வரையாடு உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்