காட்டுக்கு நடுவே தீவுபோல் தமிழகத்தின் சொர்க்க பூமி - 5 மணி நேர பயணம்...தேடிச்சென்ற கலெக்டர்
நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடா பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்து கொண்டார். மாவட்டத்தின் கடைக்கோடியில் அடந்த வன பகுதிக்குள் அமைந்துள்ள தெங்குமரஹடா கிராமத்திற்கு, சுமார் 5 மணி நேரம் பயணம் செய்து, பரிசலில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், வாக்காளர் பெயர் சேர்ப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
Next Story