பைக் மீது மோதிய பள்ளி பேருந்து.. 2 குழந்தைகள் துடிதுடித்து பலி - ICU-வில் உயிருக்கு போராடும் தாய்

x

நெய்வேலியில், இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த குழந்தைகளின் தாய்க்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கடலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் ஜஸ்விகா, டேவிட்ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்நிலையில், படுகாயமடைந்த அவர்களின் தாய் சிலம்பரசி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கியதால் தான், விபத்து நிகழ்ந்ததாக சிலம்பரசியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்