இனி நகை கடனுக்கு ஆண்டு வட்டி இல்லை - திடீர் ரூல்ஸால் கதறும் மக்கள்
கூட்டுறவு வங்கிகளில் நகைகளை கடனாக வைப்பவர்களுக்கு 30 லட்சம் வரை நகை கடன் வழங்கப்படுகிறது. இதனிடையே கூட்டுறவு வங்கிகளும் சில புதிய விதிகளை கொண்டு வந்துள்ளன... அதன் படி 2 லட்சம் ரூபாய் வரை நகை கடன் பெற்றவர்கள் மட்டுமே ஆண்டு வட்டி செலுத்த முடியும் எனவும், அதற்கு மேல் பெற்றால் மாத வட்டி செலுத்த வேண்டும் எனவும் கூட்டுறவு வங்கிகள் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன... வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை மீறி கடன் வழங்குவதும், ஏலம் எடுப்பதையும் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட இந்த புதிய விதிகள் சாமானிய மக்களுக்கான நகை கடன் திட்டத்தை சிக்கலாக்குவது, ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பெருஞ்சுமையாகவே மாறி உள்ளது .
Next Story