இணையத்தில் தீயாயை பரவிய செய்தி - முற்று புள்ளி வைத்த நிர்வாகம் | Nellaiappar Temple Tirunelveli

x

இணையத்தில் தீயாயை பரவிய செய்தி - முற்று புள்ளி வைத்த நிர்வாகம் | Nellaiappar Temple Tirunelveli

#NellaiapparTempleTirunelveli #ThanthiTv

நெல்லையப்பர் கோவில் யானை ஆரோக்கியமாக உள்ளதாகவும், சமூக வலைதளங்களில் வீண் வதந்தி பரப்பப்பட்டு வருவதாக நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான காந்திமதி என்ற 55 வயதான பெண் யானை, 1985 முதல் கோயிலில் உள்ளது. வயது முதிர்வின் காரணமாக யானை பின் கால்கள் மூலம் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்ததால், மருத்துவர்கள் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில், யானையை கொட்டைகைக்குள் அடைத்து வைத்திருப்பதாகவும், கஜபூஜைக்கு யானை கலந்து கொள்ள கோயில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை என்றும் செய்தி பரவியது. மருத்துவர்கள் யானைக்கு 10 நாட்கள் ஒய்வளிக்க

வேண்டும் என அறிவுறுத்தியதன் அடிப்படையில் தற்போது யானை கொட்டைகைக்குள் உள்ளதாகவும், கால்களை பலப்படுத்துவதற்காக பின்னங்கால்களில் பேண்டேஜ் சுற்றி பராமரிக்கப்பட்டு வருவதாகவும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. யானை நல்ல நிலையில் உள்ளது எனவும், சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் யானைக்கு உடல்நிலை சரியில்லை என்று தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்