அடுக்கடுக்கான கேள்வி.. நிலைகுலைந்த அரசு அதிகாரி- அதிரடி காட்டிய கலெக்டர்
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மீனவர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, தூத்துக்குடி, கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்கள் தங்கள் பகுதியில் அத்துமீறி மீன்பிடிப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டினார். இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என ஆட்சியர் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட போது திணறிய சந்திரா, நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
Next Story