"கேரள கழிவுகள் இன்று மாலைக்குள் முழுமையாக அள்ளப்படும்" - கேரள அதிகாரி உறுதி | Nallai

x

கேரள கழிவுகள் இன்று மாலைக்குள் முழுமையாக அள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள், நெல்லை மாவட்டத்தில் உள்ள கொண்டா நகரம், பழவூர், சீதபற்பநல்லூர், திடியூர் ஆகிய நான்கு ஊராட்சிகளில் கொட்டப்பட்டன. நேற்று ஏழு இடங்களில் அள்ளப்பட்ட 18 லாரி குப்பைகள் போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 2வது நாளாக மூன்று இடங்களில் குப்பைகளை அள்ளும் பணி நடைபெற்று வருகிறது. கொண்டா நகரம் ஊராட்சியில் 2 இடங்களிலும், பழவூர் ஊராட்சியில் ஒரு இடத்திலும் குப்பைகள் அள்ளப்பட்டு வருகின்றன. குப்பைகள் அள்ளி முடிக்கப்பட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்