நள்ளிரவில் கேட்ட சத்தம்.. கதவை திறந்து பார்த்து அலறிய பெண்.. ஊருக்கே சிவராத்திரியான பகீர் சம்பவம்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே, தங்க செயினை பறித்துவிட்டு தப்பிக்க முயன்ற திருடனை பொது மக்கள் வளைத்து பிடித்தனர். திசையன்விளை அருகே உள்ள மகாதேவன் குளம் கீரைக்காரன் தட்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தரி. நள்ளிரவில், வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, சுந்தரி கதவை திறந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது முகத்தில் மிளகாய்பொடி தூவி, கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பிக்க முயன்றுள்ளார். கண் எரிச்சலில் சுந்தரி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து திருடனை பிடித்தனர். பின்னர் திருடன் அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் என அனைவருக்கும் தெரியவந்தது. அய்யப்பனை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Next Story