"நீதிமன்றத்திலேயே பாதுகாப்பு இல்லை"தலையை சிதைத்து கொடூர கொலை..! நெல்லையில் பயங்கரம்..!
கொலை முயற்சி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வந்த கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்ற இளைஞரை, நெல்லை நீதிமன்றம் முன்பு ஏழு பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராமகிருஷ்ணன், சிவா, மனோராஜ், தங்க மகேஷ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாயாண்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதனிடையே, படுகொலை சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றும் கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
Next Story