உயிரை பணயம் வைத்து அந்தரத்தில்...கிராமத்துக்கே ஒளி கொண்டு வந்த ஊழியர் - பிரமிக்க வைக்கும் காட்சிகள்
உயிரை பணயம் வைத்து அந்தரத்தில்...கிராமத்துக்கே ஒளி கொண்டு வந்த ஊழியர் - பிரமிக்க வைக்கும் காட்சிகள்
நெல்லை அருகே உயிரை பணயம் வைத்து, சீரமைப்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முக்கூடல் அருகே உள்ள சிவகாமிபுரம் பகுதியில் மின்தடத்தில் வாகை மரத்தின் கிளை விழுந்து கிடந்தது. இதனை முக்கூடல் மின்வாரிய ஊழியர் மாரிதங்கம் என்பவர் உயிரை பணயம் வைத்து, மின்வயரில் நடந்து சென்று மரக்கிளையை வெட்டி அகற்றினார். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், மின் ஊழியரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Next Story