தாமிரபரணி ஆற்றில் விடப்பட்ட Duckweed

x

நெல்லை தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த duckweed எனப்படும் நீர்வாழ் சுத்திகரிப்பு தாவரத்தை ஆற்றில் தன்னார்வலர்கள் விட்டு வருகின்றனர். கழிவுநீர் கலப்பால் தாமிரபரணி ஆறு மாசடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், மாசை அகற்ற duckweed எனப்படும் நீர்வாழ் சுத்திகரிப்பு தாவரத்தை ஆற்றில் விடும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த duckweed தாவரம்,, நீரில் ஆக்சிஜன் அளவை அதிகரித்து, அம்மோனியா, நைட்ரேட் உள்ளிட்ட நச்சு மிகுந்த வேதிப்பொருட்களை அழிக்கும் தன்மை கொண்டது.


Next Story

மேலும் செய்திகள்