"பல க்ரைம்களின் ஸ்டார்டிங் பாய்ண்ட்" - சோசியல் மீடியாவில் வலம் வரும் அந்த மாறி வீடியோக்கள் | Nellai

x

திருநெல்வேலியில் இரு பிரிவினருக்கிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பாக உண்மைக்குப் புறமான தகவல்களை சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதாகவும், சிலர் ஜாதி பெயரை சொல்லி வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருவதால் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இது போன்ற செயல்கள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நெல்லை தாலுகா காவல்நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை தேடி வருவதாக எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார். மேலும், திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அனைத்து விதமான சமூக வலைத்தளங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வீடியோக்களை பதிவேற்றம் செய்தால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்